அரசியலில் நுழைய மாட்டேன்: முத்துலட்சுமி
சத்தியமங்கலம்:
அரசியலில் நுழையும் எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு சற்றே அமைதியாக இருந்து வந்த முத்துலட்சுமி, சமீப காலமாக அதிரடிப்படையினரால்பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களின் நலனுக்காக புதிய இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாக கூறி வருகிறார் முத்துலட்சுமி.இதன் முதல் கட்டமாக மலைவாசிகள் வசிக்கும் பகுதிகளில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதன் ஒரு கட்டமாகசத்தியமங்கலம் வந்த முத்துலட்சுமி அங்கு தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லாவை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மலை வாழ் மக்களின் நலனுக்காக நான் ஏற்படுத்தியுள்ள அமைப்புக்குநிதியுதவி செய்யுமாறு ஜவாஹிருல்லாவைக் கேட்டுக் கொண்டேன். மேலும் வீரப்பனின் தம்பி அர்ஜூனின் மகனுக்கு கல்விக்கானநிதியுதவியை வழங்கவும் அவரிடம் கோரிக்கை விடுத்தேன்.
அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்கள் பலர் என்னிடம் வந்து தாங்கள் பட்டு வரும் சிரமங்களை,கொடுமைகளைக் கூறி இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கக் கோரினர். அதனால்தான் புதிய இயக்கத்தை தொடங்கவுள்ளேன். நான்அரசியலில் நுழைவதற்காக இதை ஆரம்பிக்கவில்லை.
முன்பு அதிரடிப்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான மலை வாழ் மக்கள் தற்போது வனத்துறையினரால் பல்வேறுபிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
எனது கணவர் சாவில் உள்ள மர்மங்களுக்கு இன்னும் அரசுத் தரப்பில் முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இதுதொடர்பானஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு அரசு அனுப்பாமல் உள்ளது என்றார் முத்துலட்சுமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications