மன்மோகன் சிங் நிகழ்ச்சி; ஜெ. புறக்கணித்தார்!
சென்னை
சென்னையில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்ட தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத் தொடக்க விழாவை முதல்வர்ஜெயலலிதா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
சென்னை தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் ரூ 47 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தைஇன்று மாலை நடந்த விழாவின்போது நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.விழாவில் மன்மோகன் சிங் பேசுகையில், மிகச் சிறந்த மருத்துவ முறைகளை விளக்குவதாக பழங்கால ஓலைச்சுவடிகள் விளங்குகின்றன.இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் இந்த ஓலைச் சுவடிகள் மிகப் பெரும்பங்காற்றுகின்றன.
பழங்கால மருத்துவத்திற்கு மனித குலம் திரும்பிக் கொண்டுள்ளது. இந்த மருத்துவ முறைகள் நோய்களை மட்டும் குணப்படுத்துவதில்லை,மாறாக, நோய்கள் வராமல் தடுக்கும் சிறப்புத் தன்மை கொண்டவை. அத்தகைய சிறந்த மருத்துவ முறைகளில் ஒன்றுதான் சித்த மருத்தவம்.
எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத சித்த மருத்துவம் போன்ற நமது நாட்டின் மருத்துவ முறைகளை மக்கள் நல்லாதரவு கொடுத்துபயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார் மன்மோகன் சிங்.
இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வரவில்லை. அமைச்சர்கள்அன்புமணி ராமதாஸ், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய நூல் வெளியீட்டு விழாவில்மன்மோகன் கலந்து கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications