தலித் இளைஞர்கள் படுகொலை: ஜெ.வுக்கு திருமா கோரிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடலூர் மாவட்டத்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டவர், சென்னை உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் கார்த்திக் என்பவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கார்த்திக்கிற்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சேரி மக்களுக்கு இதன் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தலையிட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். இதற்கு முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications