பிரதமரை அவமதித்து விட்டார் ஜெ.: கருணாநிதி
சென்னை:
பிரதமர் கலந்து கொண்ட விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா அவமதித்துவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மூத்த தலைவர்களைப் புறக்கணிப்பது, அவமதிப்பது, அநாகரீகமாக நடந்து கொள்வது,எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது, அமைச்சர்கள், அதிகாரிகளை மதிக்காத தன்மை,கலாச்சாரத்தை அசிங்கமாக நினைப்பது போன்றவை ஜெயலலிதாவின் இயல்புகள்.பிரதமர் கலந்து கொண்ட விழாவுக்கு அவர் வந்திருந்தால்தான் ஆச்சரியமாக இருந்திருக்கும். எதிர்பார்த்தது போலவேபுறக்கணித்து பிரதமரை அவமதித்துள்ளார். இத்தகைய போக்கை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது மாநில நலனுக்குஉகந்ததல்ல.
சமீபத்தில் டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலில் ஜெயலலிதா பேசுகையில், விவசாயத்திற்கு தனது அரசுமுக்கியத்துவம் தருவதாக கூறியிருந்தார். ஆனால் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், பசி, பட்டினியால் 50க்கும் மேற்பட்டவிவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
அரசு கொடவுன்களில் போதிய உணவு தானியக் கையிருப்பு இல்லை. இதுகுறித்து புள்ளிவிவரத்துடன் நாம் எடுத்துக் கூறினாலும்அதற்கு ஜெயலலிதா பதிலளிப்பதில்லை.
கடந்த 18 மாதங்களில் விவசாயத் துறையில் 18 கூடுதல் இயக்குநர் பணியிடம் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. மொத்தம்உள்ள 134 உதவி இயக்குநர் பணியிடங்களில் 15 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. இதுதான் தமிழக அரசுவிவசாயத்துறை மீது காட்டும் அக்கறையின் லட்சணம்.
காவல்துறையும் இந்த அரசின் அலட்சியப் போக்கிலிருந்து தப்பவில்லை. காவல்துறைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வுபெறுவதற்குத் தகுதி வாய்ந்த 21 கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு தராமல் வைத்துள்ளது இந்த அரசு. 9பணியிடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. சில மூத்த காவல்துறை அதிகாரிகளே எனக்குத் தந்த தகவல் இது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications