அண்ணா பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிக்கிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15ம் தேதி அவரதுசிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 97வது பிறந்த நாளாகியசெப்டம்பர் 15ம் தேதியன்று காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதாதலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மாலைஅணிவித்து மரியாதை செய்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து அமைப்புகள், அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத் தலைநகரங்களில் அண்ணா பிறந்த நாளன்று சிறப்புப் பொதுக்கூட்டங்களும் அதிமுகசார்பில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications