6 மாதத்தில் எங்க ஆட்சி: ப.சி பகீர்!
புதுக்கோட்டை:
தமிழகத்தில் இன்னும் ஆறே மாதங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்தடாலடியாக கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தனதுகடமைகளை பூரணமாக ஆற்றி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி இல்லையே என்ற ஒரே குறைதான் இங்கு உள்ளது. ஆனால் இன்னும்6 மாதத்தில் தேர்தல் வரும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து அரசமைக்கும்.மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு வந்தது மத்திய அரசுதான். ஆனால் இப்போது அத்திட்டத்திற்கு யார் யாரோ உரிமைகொண்டாடி வருகிறார்கள். தங்களுக்கு சாதகமாக மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் நான்கு கோடி விவசாயிகள் கடனாளிகளாகவும், 6 கோடி விவசாயிகள் கூலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.இந்த நிலையை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு தேர்தல் நெருங்கி வருவதையடுத்து பலர் மீது பரிவு காட்டத் தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்மீது திடீரென காதல் மலர்ந்துள்ளது. இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஒரே நாளில் 1 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்குஅனுப்பி கின்னஸ் சாதனை படைத்தது இந்த அரசுதான் என்பதை அந்த அரசு உள்பட யாரும் மறக்கவில்லை, மறக்கவும்மாட்டார்கள் என்றார் ப.சிதம்பரம்.
அடுத்த தேர்தலில் தாங்கள்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று திமுகவினர் நினைத்துக் கொண்டுள்ள நிலையில்காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும் என்று ப.சிதம்பரம் பேசியிருப்பது, திமுக, காங்கிரஸ் இடையே மீண்டும் ஒரு சர்ச்சையைக்கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications