ஜெயேந்திரர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை
புதுடெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீது குற்றச்சாட்டுக்களைப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கில் இன்று செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச் சாட்டுக்கள் பதிவுசெய்யப்படவிருந்தது. இதற்காக குற்றம் சாட்டப்பட்ட 25 பேரும் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிஉத்தரவிட்டிருந்தார்.இந்த நிலையில் இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஜெயேந்திரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயேந்திரர், விஜயேந்திரர்ஆகியோர் சதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டிருப்பதால், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதைப் பரிசீலனை செய்த நீதிபதிகள், இரு சங்கராச்சாரியார்களுக்கும் நேரில் ஆஜராக விலக்கு அளித்தனர். அக்டோபர் 4ம்தேதி வரை சங்கரராமன் கொலை வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யக் கூடாது. அதேசமயம் வழக்கு விசாரணைதொடர்ந்து நடைபெறலாம். 4ம் தேதி நீதிமன்றம் கூடும்போது, ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் நேரில் ஆஜராகத்தேவையில்லை என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி அக்பர் அலி, உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய தடை விதித்திருப்பதால் வருகிற 12"ம்தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. அன்று உச்சநீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் தவிர மற்ற 23 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications