கர்நாடகத்திற்குள் நுழைந்ததாக தமிழக படகோட்டி கைது
ஓகனேக்கல்:
தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கல் காவிரி ஆற்றில் தமிழக எல்லையைத் தாண்டி, கர்நாடகத்திற்குள் பரிசல் ஓட்டியதாக கூறிதமிழக படகோட்டியை கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் காவிரி நுழையும், நுழைவாயிலாக ஓகனேக்கல் உள்ளது. இரு மாநில எல்லை நகராகவும்இது உள்ளது. ஓகனேக்கல் அருவியின் வழியாகத்தான் காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழைகிறது.இதில் தமிழக எல்லைக்குள் உள்ள அருவியில் பரிசல் ஓட்டுவதற்கான உரிமத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவர் எடுத்துள்ளார்.அதேபோல, கர்நாடக மாநில அருவிப் பகுதியில் பரிசல் ஓட்டும் உரிமத்தை ஆறுமுகம் என்பவர் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எல்லையைத் தாண்டி வந்து பரிசல் ஓட்டுவதாகபரஸ்பரம் குற்றம் சாட்டினர். இது பெரும் மோதலாக மூளும் நிலை உருவானது.
இதுதொடர்பாக கர்நாடக போலீஸார் சிலர் தமிழக பகுதியில் உள்ள மாமரத்துக்கடவு பரிசல் துறைக்கு வந்தனர். அங்குள்ளபரிசல் ஓட்டிகளைப் பார்த்து, இனிமேல் கர்நாடகப் பகுதிக்குள் பரிசல்களை ஓட்டி வரக் கூடாது என்று எச்சரித்துச் சென்றனர்.
இந்தச் சூழ்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கர்நாடக போலீஸார் அங்கு வந்தனர். அவர்களுடன்வனத்துறையினரும் வந்தனர். இவர்கள் சுப்ரமணியம் என்ற படகோட்டியை, கர்நாடக பகுதிக்குள் வந்து பரிசல் ஓட்டியதாக கூறிகைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து பரிசல் ஓட்ட உரிமம் பெற்றுள்ள கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக போலீஸாரின் நடவடிக்கை குறித்து ஓகனேக்கல்போலீஸில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications