அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு தாத சாஹேப் பால்கே விருது
புதுடெல்லி:
மலையாள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு தாத சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாளப் பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். 1972ம் ஆண்டு வெளியான சுயம்வரம் என்ற படத்தின் மூலம்தனது இயக்குநர் வாழ்க்கையைத் துவக்கியவர். எதார்த்தமான கதைகளை படமாக்கி பெரும் வெற்றி பெற்றவர் அடூர்.இவரது படங்களில் முக்கியமானவை எலி பத்தாயம், முகமுகம், அனந்தரம், மதிலுகள், விதேயன், கதாபுருஷன் ஆகியவை.கடைசியாக இயக்கிய படம் நிழல் கூத்து. இவர் இயக்கியுள்ள அனைத்துப் படங்களுமே ஏதாவது ஒரு விருதைப் பெற்று சாதனைபடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்கு முறை தேசிய விருதுகளும், கேரள மாநில விருதுகளை பலமுறையும், சர்வதேச அளவில் ஒருமுறையும் பெற்றுள்ளார் அடூர்.கடந்த 1984ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
இந்தியத் திரையுலகின் ஜாம்பவான்களாக திகழ்ந்த சத்யஜித் ரே, ஷியாம் பெனகல் வரிசையில் அடூர் கோபாலகிருஷ்ணனும்பேசப்படுகிறார்.
இந்த ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது பெற அடூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெறும் தேசியதிரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின்போது பால்கே விருது அடூருக்கு வழங்கப்படும்.
கடந்த 1969ம் ஆண்டு முதல் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 2 பேருக்கு மட்டுமேஇதுவரை இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கன்னட நடிகர் ராஜ்குமார் ஆகியோரேஅவர்கள். தென்னிந்தியாவுக்கு இந்த விருது 3வது முறையாக வந்துள்ளது. மற்ற ஆண்டுகளில் எல்லாம் இந்தி மற்றும் வங்கமொழிகளைச் சேர்ந்தவர்களே இந்த விருதுகளைப் பெற்று வந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications