காவிரியில் வெள்ளப் பெருக்கு: 1000 பேர் பாதிப்பு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குடிசைக்குள்தண்ணீர் புகுந்தது. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு தற்போது கணிசமான நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக உபரி நீர்அனைத்தும் அப்படியே வெளியேற்றப்பட்டுக் காண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 36,000 கன அடி உபரி நீர்வெளியேறிக் கொண்டிருக்கிறது.இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெருவதால் காவிரியில் ஏற்பட்டுள்ளவெள்ளப் பெருக்கால் தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட சில காவிரிக் கரையோர மாவட்டங்களில் குடிசைப் பகுதிகளுக்குள் தண்ணீர்புகுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்கரையைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது. இதனால் பள்ளிப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசைகளுக்குள் தண்ணீர்புகுந்தது.
குடிசைகளில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 5000 குடிசைகள்வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும்அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications