அதிமுக கூட்டணிக்குப் பாமக தாவும்: இல.கணேசன்
புதுடெல்லி:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி சேர அதிக வாய்ப்புகள் உள்ளதாகபாஜக தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தனியாகத்தான் போட்டியிடுவோம்.எங்களது சொந்த பலத்தை நிரூபிப்போம். அதற்காக நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக கூற முடியாது.திமுக கூட்டணியைப் பிளக்க முயற்சிகள் நடக்கிறது. இதில் மதிமுக மட்டும் தப்பியுள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் சலசலப்பைகாண ஆரம்பித்துள்ளன. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை மீது அதிக சந்தேகம் எழஆரம்பித்துள்ளது.
பாமகவைப் பொருத்தவரை வெற்றி பெறக் கூடிய கட்சியுடன் மட்டுமே அது கூட்டணி அமைக்கும். கடந்த தேர்தலில் அக்கட்சிஅதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டு 20 தொகுதிகளைப் பிடித்தது. பின்னர் கூட்டணியை விட்டு வெளியேறியது.
இந்த முறையும் அது அதிமுக கூட்டணிக்குத் தாவும் என்பதில் சந்தேகம் இல்லை. ராமதாஸ் போன்ற பாமக தலைவர்கள்ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்திருந்தாலும் அவற்றை மறந்து அதிமுகவுடன் சேர பாமக தயங்காது. அதே போலத்தான்கம்யூனிஸ்ட் கட்சிகளும். இவை இரண்டும் திமுக மீது அதிருப்தியாக உள்ளன.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மட்டுமே இப்போதைக்கு கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்யாதவர். பொடாசட்டத்தின் கீழ் கைது தெசய்யப்பட்டதை அவர் இன்னும் மறக்கவில்லை. என மதிமுக பிரியாது என்றே தெரிகிறது.
தேர்தல் எப்போது வந்தாலும் அதை சமாளிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார் கணேசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications