தமிழக பாஜக தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்?
சென்னை:
தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் விரைவில்நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளார். முன்னாள் எம்.பியான சி.பி.ராதாகிருஷ்ணனின்செயல்பாடுகள் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேசிய செயலாளர்இல.கணேசன் கடும் அதிருப்தியில் உள்ளார்.இந்தச் சூழ்நிலையில் வருகிற சட்டசபைத் தேர்தலை வலுவுடன் சந்திக்க திறமையான ஒரு தலைவர் தேவை என்ற கருத்து கட்சிமேலிடத்திடம் அடிக்கடி வலியுறுத்தப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து கட்சிக்குப் புதிய தலைவரை நியமிக்க பாஜக மேலிடம்முடிவு செய்தது.
புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.திருநாவுக்கரசர் நியமிக்கப்படவுள்ளார். தற்போது திருநாவுக்கரசர்ராஜஸ்தான் மாநில மாநிலங்களவை உறுப்பினராக உள்ளது நினைவிருக்கலாம்.
அதிமுகவில் முக்கியப் புள்ளியாக முன்பு திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக 9 ஆண்டுகாலம் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் பின்னர் ஜெயலலிதாவால்கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
அதன் பிறகு புதிய கட்சியை ஆரம்பித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் ஜெயலலிாதவுடன் போய் இணைந்தார். ஆனால்அதே வேகத்தில் அங்கிருந்து வெளியேறி மீண்டும் புதுக் கட்சி தொடங்கினார். அதையும் பின்னர் பாஜகவில் இணைத்து வாஜ்பாய்அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. முதல்வர் ஜெயலலிதாவின்நிர்ப்பந்தம் காரணமாக திருநாவுக்கரசருக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். இருப்பினும்கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன் என்று கூறினார். பின்னர் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை ராஜ்யசபா எம்.பிஆக்கியது பாஜக.
வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னையில் பாஜக தேசிய செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.அப்போது திருநாவுக்கரசர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications