சிம்லா: நதியில் மூழ்கி 30 ராணுவ வீரர்கள் பலி?
Subscribe to Oneindia Tamil
சிம்லா:
சிம்லா அருகே சட்லெஜ் நதியில் 30 ராணுவ வீரர்கள் மூழ்கினர். இதில் அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா அருகே உள்ள காரோ என்ற இடத்தில் சட்லெஜ் நதியின் குறுக்கே ஒரு பாலத்தைநிர்மாணிக்கும் பணியில் 2 பொறியாளர்கள் உள்பட 30 ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தப் பாலம் திடீரென உடைந்து விழுந்ததில், 30 பேரும் நதியில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் தண்ணீர்வேகமாக ஓடுவதால் அதில் விழுந்த 30 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
எல்லைப்புற சாலைகள் கழகம், இந்தோ-திபெத் எல்லை போலீஸ், மாநில போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினர் நதியில்விழுந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை யாரும் மீட்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications