விநாயகர் சிலை கரைப்பு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சென்னை தவிர பிற மாவட்டங்களில் எங்கெல்லாம் விநாயகர் சிலைகள் கரைக்கப்படவுள்ளன என்ற பட்டியலை வருகிறசனிக்கிழமைக்குள் தெரிவிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் பொது நலன் மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார். அதில், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் வேதிப் பொருளால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை நீர்நிலைகளில் கரைத்தால் தண்ணீர் மாசுபடும். எனவே அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், தணிக்காச்சலம் ஆகியோர், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் எங்குசிலைகள் கரைக்கப்படவுள்ளன என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குஉத்தரவிட்டிருந்தார்.
இந்த மனு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவையில் 3இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நீர் நிலைகள் குடிநீருக்காகபயன்படுத்தப்படுவதில்லை. மற்ற இடங்களில் எங்கு கரைக்கப்படவுள்ளன என்பதை வருகிற சனிக்கிழமைக்குள் தெரிவிப்பதாககூறினார்.
இதைத் தொடர்ந்து வருகிற சனிக்கிழமைக்குள் முழு விவரத்தையும் தர வேண்டும். இதுதொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம்செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications