கிருஷ்ணா நீர்: ஆந்திர குழு சென்னை வருகிறது
சென்னை:
கிருஷ்ணா நீரை விடுவிப்பது தொடர்பாக ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் சென்னைக்கு வந்து தமிழகஅதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சென்னைக்கு கிருஷ்ணா நீரை திறந்து விட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதாகடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமீபத்தில் சென்னைக்கு வந்த ராஜசேகர் ரெட்டி தெரிவித்திருந்தார்.இந்தப் பின்னணியில், ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை செயலாளர்கள் அளவிலான குழுவருகிற 13ம் தேதி சென்னைக்கு வருகிறது. இக்குழுவுக்கு தெலுங்கு கங்கை திட்ட தலைமை செயல் அதிகாரி விஜயக்குமார்ரெட்டி தலைமை தாங்குகிறார்.
இந்தக் குழுவினர் தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்தபேச்சுவார்த்தையின்போது கிருஷ்ணா நீரை திறந்து விடுவது தொடர்பாக முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது.
தற்போதைய நிலையில், ஆந்திர மாநிலம் சோமசீலா அணையில் 16 டிஎம்சி தண்ணீர் உள்ளது. 23 டிஎம்சி தண்ணீர் இருந்தால்தான்அணையைத் திறக்க முடியும். தற்போது அணைக்கு ஓரளவு தண்ணீர் வரத்து உள்ளது. இன்னும் 10 நாட்களில் அணை நிரம்பும் எனஆந்திர அரசு எதிர்பார்க்கிறது. அணை நிரம்பிய பிறகு சோமசீலா அணை திறக்கப்படும். இந்தத் தண்ணீர் கண்டலேறு அணைக்குவரும். கண்டலேறு அணையில் போதிய அளவில் நீர் இருந்தால் அது தமிழகத்திற்குத் திறந்து விடப்படும்.
இந்தத் தண்ணீர்தான் சென்னைக்கு அருகே உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடையும். எப்படியும் இன்னும் 2 வாரங்களில் பூண்டிநீர்த் தேக்கத்திற்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஓரளவு நீரே இருப்பு உள்ளது. இருப்பினும் வீராணம்ஏரியில் போதிய தண்ணீர் இருப்பதால் சென்னைக்கு தினசரி குடிநீர் வழங்குவதில் இதுவரை பிரச்சினை ஏதும் வரவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications