விஜயகாந்த்துக்கு வட தமிழ்நாடு மக்கள் இயக்கம் கண்டனம்
சென்னை:
ரஜினிகாந்த்தை நடிகை மனோரமா தரக்குறைவாக விமர்சித்தபோது அதைக் கண்டு கொள்ளாத நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்த், நடிகைகள் குறித்து பேசியதற்காக இயக்குநர் தங்கர்பச்சான் விவகாரத்தில் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டார் என்று வட தமிழ்நாடு மக்கள் இயக்கம் என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் அமைப்பாளர் இறைவனார் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், இயக்குநர் தங்கர்பச்சான்விவகாரத்தில் அநாவசியமாக நடந்து கொண்டதன் மூலம் நடிகர் விஜயகாந்த் தமிழர்கள் மீது யுத்தம் தொடங்கியிருக்கிறார்.முன்பு நடிகை மனோரமா, நடிகர் விஜயகாந்த்தை தரக்குறைவாகவும், மிகக் கடுமையாகவும் விமர்சித்தார். அப்போதும்விஜயகாந்த்தான் தலைவராக இருந்தார். ரஜினியை விமர்சித்த மனோரமா மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் தங்கர்பச்சான் விவகாரத்தில் எல்லை மீறி செயல்பட்டிருக்கிறார் விஜயகாந்த். ஒன்றுமே இல்லாத பிரச்சினையைபெரிதுபடுத்தி விட்டார். தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் தங்கர்பச்சான்.இவரைப் போலவே,இயக்குநர் சீமான், பாடலாசிரியர் அறிவுமதி ஆகியோரும் தங்களை இயக்கத்தில் முழுமையாக ஈடுபுத்திக் கொண்டவர்கள்.
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று இவர்கள் சொன்னால் நடிகர், நடிகைகளுக்கு கோபம் வருகிறது.இப்படியெல்லாம் அவர்களது தமிழ் விரோதப் போக்குக்கு முட்டுக்கட்டை போடப்படுவதால், பழிவாங்கும் விதமாகதங்கர்பச்சானை அசிங்கப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் தமிழுக்கு எதிராக யுத்தம் தொடங்கி விட்டனர்.
விஜயகாந்த்தை திருமாவளவன் மட்டுமே கண்டித்துள்ளார். அதேபோல ராமதாஸ், பழச நெடுமாறு
இதற்கு தங்கர்பச்சானை பழி வாங்கவே அவருக்கு எதிரான பிரச்சனையை நடிகர் விஜயகாந்த் தனது பதவியை துஷ்பிரயோகம்செய்தார். இதன்மூலம் விஜயகாந்த் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை தொடங்கியிருக்கிறார். இது வன்மையாகக்கண்டிக்கத்தக்கது. நடிகர் விஜய காந்தின் செயல்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் மட்டுமேகண்டித்திருந்தார்.
ஆனால் ராமதாஸ், பழ. நெடுமாறன், டாக்டர் சேதுராமன் ஆகிய தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர்களும் விஜயகாந்த்தைகண்டிக்க வேண்டும். அவருக்கெதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் இறைவனார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications