மதானி மீது தாக்குதல்: விசாரணைக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை
சென்னை:
கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்புக் கைதியாக உள்ள கேரள மாநில மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர்மதானி தாக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் வரதராஜன் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி, கடந்த 7 வருடமாகசிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவர் மீதான வழக்கில் இன்னும் விசாராணை முடியவில்லை. இந்த நிலையில் மதானி மற்றும்அவருடன் அடைக்கப்பட்டுள்ள இன்னொரு கைதியை கடந்த 2ம் தேதியன்று சிறைக் காவலர்கள் தாக்கியதாக செய்திகள்வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்களை நீதிபதி எச்சரித்திருக்கிறார். மதானி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்,அவருடைய நெருங்கிய உறவினரின் சாவுக்குக் கூட சென்று பார்க்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
7 ஆண்டுகள் வரை மதானியை வெறும் விசாரணைக் கைதியாகவே வைத்திருப்பது மனித உரிமையை மீறும் செயலாகும். மதானிமற்றும் இன்னொரு கைதி தாக்கப்பட்டது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். அவர் சம்பந்தப்பட்டவழக்கை விரைந்து முடிக்க ஆவண செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications