ஐடியலை விசாரிக்க திண்டுக்கல் போலீஸ் முடிவு
திண்டுக்கல்:
ஐடியல் மீது நிலுவையில் உள்ள 14 வழக்குகள் தொடர்பாக அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் குற்றப் பிரிவுபோலீஸார் முடிவு செய்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி பல பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ஐடியல் சுப்ரமணியம் மற்றும் அவரதுகூட்டாளிகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.சமீபத்தில் வத்தலகுண்டு, கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு ஐடியலை அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் திண்டுக்கல்லில் ஐடியல் சுப்ரமணியம் தொடர்பான 14 வழக்குகளில் அவரை காவலில் எடுத்து விசாரிக்கதிண்டுக்கல் குற்றப் பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஐடியல் சுப்ரமணியம், செளந்தர், மணிகண்டன் ஆகியோரை சென்னை போலீஸார் இன்று திண்டுக்கல் அழைத்துவந்து நீதிபதி ஜான் வினோ முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க ஐடியல் சுப்ரமணியம், செளந்தர், மணிகண்டன் ஆகியோரை போலீஸ்காவலில் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போலீஸ் காவலில் செல்லவிரும்புகிறீர்களா என்று கேட்டார். அதற்கு ஐடியல், உடல் நலம் சரியில்லை எனவே செல்ல விரும்பவில்லை என்றார். மற்றஇருவரும் செல்கிறோம் என்றனர்.
இதைக் கேட்ட நீதிபதி மாலையில் இந்த மனு மீது தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். திண்டுக்கல் காவல் நிலையங்களில் ஐடியல்மீது 12 வழக்குகளும், அவரது இரு கூட்டாளிகள் மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.












Click it and Unblock the Notifications