மக்களுக்காக குரல் கொடுக்க திமுக தவறியதில்லை: கருணாநிதி
திண்டுக்கல்:
மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க திமுக என்றுமே தயங்கியதில்லை, தவறியதில்லை என்று அக்கட்சியின் தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், டெல்லியில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழகத்தைச்சேர்ந்த இளம் தலைமுறை அரசியல் தலைவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. அதில்காமராஜருக்குப் பின் தமிழகத்திலிருந்து நல்ல தலைவர் ஏன் உருவாகவில்லை என்று கேட்கப்பட்டுள்ளது.மேலும், இந்தி, ஆங்கிலம் தெரியாத காமராஜரைத் தவிர, மற்ற தலைவர்கள் தமிழகத்துடன் தங்களது எல்லைகளை சுருக்கிக்கொண்டனர் என்றும் செய்தியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இது தவறானதாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த மூப்பனார், டெல்லியில் தனி வீட்டில் தங்கி அரசியலில் ஈடுபட்டார். திமுகவும், பல்வேறுபிரச்சினைகளுக்காக டெல்லியில் வாதாடியுள்ளது. சேலும் உருக்காலை தனியாரிடம் விடப்படவுள்ளதாக பிரச்சினைஎழுந்தபோது மத்தியில் கடுமையாக வாதாடி அதைத் தடுத்து நிறுத்தினோம்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு தோள் கொடுத்து நின்றது திமுக. பின்னர் வந்த வி.பி.சிங், குஜ்ரால், வாஜ்பாய்போன்றோருக்கும், தற்போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கும் உறுதணையாக இருந்து வருகிறது திமுக.
தமிழ் செம்மொழி, சேது சமுத்திரத் திட்டம், சென்வாட் வரி ரத்து, பொடா சட்டம் ரத்து ஆகியவற்றில் திமுகவின் பங்குமுக்கியமானது.
டெல்லி சென்றுதான் எதையும் செய்ய வேண்டும் என்பதில்லை. சென்னையில் இருந்து கொண்டும் மக்களுக்காக குரல் கொடுக்கமுடியும். அதைத்தான் திமுக செய்து வருகிறது.
எனவே நானும் ஒரு காமராஜரைப் போலத்தான். இதை நான் கர்வத்தாலோ அல்லது தலைக்கனத்தாலோ சொல்லிக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications