அடை மழை: ஸ்தம்பித்தது கொடைக்கானல்!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும்பாதிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது மழை சீசன். கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறித் தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வெள்ளம் போலதண்ணீர் தேங்கிக் கிடப்பதால் வாகனங்கள் போக முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் லேசான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும் எங்கும் போகமுடியாமல் தங்களது ஹோட்டல் அறைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க நேரிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications