விபத்தில் சிக்கியது குர்லா எக்ஸ்பிரஸ்; பயணிகள் தப்பினர்
ஓமலூர்:
குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது. இதனால் 2500க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
மும்பையிலிருந்து கோவை வரை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் அருகே வந்து கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமைஅதிகாலை 3.30 மணியளவில் ஓமலூர் அருகே சரபங்கா ஆற்றுப் பாலத்தின் மீது ரயில் வந்தபோது திடீரென பெரும் சப்தம்கேட்டது.இதையடுத்து ரயிலை ஓட்டுநர் அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தி நிறுத்தினார். உடனடியாக ஓமலூர் ரயில் நிலையத்திற்குத்தகவல் சென்றது. அங்கிருந்து கோட்ட பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பொறியாளர்கள், தீயணைப்புப் படையினர்,ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்தனர்.
சப்தம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஆராய்ந்தபோது, முதலாவது வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்குக் கீழேநீளமான இரும்புத் தகடு தண்டவாள சக்கரங்களில் சிக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாகவே ரயில்சென்றபோது பெரும் சப்தம் ஏற்பட்டுள்ளது.
கேஸ் வெல்டிங் மூலம் இரும்புத் தகடு அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை 6.45 மணிக்கப் பிறகு ரயில் அங்கிருந்துகிளம்பிச் சென்றது. ஆற்றுப் பாலத்தில் ரயில் தடம்புரண்டு ஆற்றில் விழுந்திருந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும். அந்தரயிலில் 2500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது திட்டமிட்ட சதியா அல்லது தண்டவாள இரும்புத் தகடு, ரயில் பெட்டிக்குக் கீழே சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தாஎன்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications