மீனாட்சி அம்மன் கோவில்களுக்கு விரைவில் சுதந்திரம்!
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள, பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த கிளிகளைசுதந்திரமாக பறக்க விட கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அன்னை மீனாட்சிக்கு நேர்த்திக் கடனாக கிளிகளை தருவது பக்தர்கள் வழக்கம். இந்தக் கிளிகள் கோவில் பொற்றாமரைக்குளம்உள்ள கிளிக் கூண்டில் வைத்துப் பராமரிக்கப்படும். கிட்டத்தட்ட 90 கிளிகள் வரை இந்த கூண்டில் உள்ளன.இந்தக் கிளிகள் கோவிலுக்கு வருவோருக்கு மன மகிழ்ச்சியைத் தரும். கிளிகளை மீனாட்சி என்று சொல்லி அழைத்தால் அவையும்மீனாட்சி என்று பதிலுக்கு குரல் கொடுக்கும். தற்போது இந்தக் கிளிகளுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போய் விடுகிறது.இதையடுத்து அக்கிளிகளை சுதந்திரமாக பறக்க விட கோவில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன் இதுகுறித்துக் கூறுகையில், இந்தக் கிளிகள் தொடர்ந்து கூண்டிலேயே அடைபட்டுக்கிடப்பதால் இவைகளுக்கு அடிக்கடி நோய் தாக்குவதாக புளூ கிராஸ் அமைப்பினர் கூறியுள்ளனர். எனவே இவற்றைப் பறக்கவிட முடிவு செய்துள்ளோம்.
மீனாட்சி அம்மனின் விருப்பப் பறவை என்பதால் 2 கிளிகளை மட்டும் கோவிலில் வைத்து வளர்க்க முடிவு செயய்ப்பட்டுள்ளது.மற்ற கிளிகள் பறக்க விடப்படும். பக்தர்களும் இனிமேல் கிளி காணிக்கை தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்என்றார்.












Click it and Unblock the Notifications