சினிமா பாடலாசிரியர்களை கைது செய்யக் கோரி வழக்கு
சென்னை:
பாலுணர்வைத் தூண்டும் வகையில் பாட்டு எழுதும் திரைப்பட பாடலாசிரியர்கள் மீது வழக்குத் தொடர காவல்துறைக்குஉத்தரவிடுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொழிலாளர் குடியரசு ணின்னணி என்ற அமைப்பின் தலைவர் ரகு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமனுவில், பெண்களுக்கு எதிரான கலாச்சார சீரழிவைத் தடுப்பதற்காக குரல் கொடுத்து வருகிறது எங்கள் அமைப்பு.தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் பெண்களைப் பற்றி ஆபாசமாக பாட்டுக்கள் எழுதுவது, வர்ணிப்பது அதிகரித்து வருகிறது.இந்தப் பாடல்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாலுர்ணவைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
பெண்களை கேலி செய்தால், கிண்டல் செய்தால், ஈவ் டீசிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்கிறார்கள்.ஆனால் அப்படிச் செய்தவர்கள் பாடும் பாடல்களை எழுதிய திரைப்பட பாடலாசிரியர்கள் மீது போலீஸார் நடவடிக்கைஎடுப்பதில்லை.
கவிஞர் வைரமுத்து எழுதிய சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானோ டோய், சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா, மல மலமருதமல, கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா போன்ற பாடல்கள் பெண்களை அவமதிப்பது போல உள்ளது.
இந்தப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால்போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். எனவே இப்புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பாடலாசிரியர்கள் மீதுநடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ரகு.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications