சேது: மறு பரிசீலனை செய்ய புதிய தமிழகம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
பொறையார்:
சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.நாகை மாவட்டம் பொறையாரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களும், கடல்வளமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மீனவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு முயலுவது கவலை தருகிறது.
எனவே மீனவர்கள் மற்றும் மீன் வளம் கருதி இத்திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications