வீராணம் ஏரியில் கழிவு நீர் கலப்பு? மீன்கள் செத்து மிதக்கின்றன!
கடலூர்:
சென்னைக்கு குடிநீரும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன நீரும் வழங்கும் வீராணம் ஏரியில் நூற்றுக்கணக்கானமீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் ஏரி நீரில் சாயக் கழிவு நீர் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு தற்போது நல்ல நீர்வரத்து உள்ளது. இங்கிருந்துதான் சென்னைக்குகுடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஈரோடு சாயப் பட்டறைகளிலிருந்து வெளியாகி ஒரத்துப்பாளையம் அணையில்தேங்கியிருந்த கழிவு நீர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திறந்து விடப்பட்டது.இந்த சாயக் கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்து அந்த அசுத்த நீர் வீராணம் ஏரியில் கலப்பதாக புகார் எழுந்தது. ஆனால் இதைதமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்தது. வீராணம் ஏரியில் சாயக் கழிவு நீர் கலக்கவில்லை என அதுதெளிவுபடுத்தியது.
இந்த நிலையில், வீராணம் ஏரியிலும், ஏரிக்கு வரும் கால்வாய்களிலும் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தென்பாதி, கந்தகுமரன், பூலாப்பாடி, வாழக்கொல்லை, விருதங்க நல்லூர், பரிபூரண நத்தம்ஆகிய கிராமங்களில், வீராணம் ஏரிக்கு செல்லும்
கால்வாய்களில் மீன்கள் செத்துக் கிடக்கின்றன.
மீன்கள் செத்துக் கிடப்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தகவல்தரப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரி குப்புசாமி கூறுகையில், பப்பை வகை மீன்தான் தற்போது செத்துமிதக்கிறது. ஏரியில் மழை காரணமாக சேர்ந்த அசுத்த நீர் கலந்திருக்கலாம். அதனால்தான் மீன்கள் செத்திருக்கும் எனநம்புகிறோம். மீன் செத்து மிதப்பதால் வீராணம் ஏரி அசுத்தமடைந்திருக்கும் என்று நினைக்கத் தேவையில்லை என்றார்.
இதற்கிடையே, வீராணம் ஏரி நீரை மீண்டும் ஆய்வுக்குட்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications