வேளாங்கண்ணி மாதா கோவில் பெருவிழா நிறைவுற்றது
Subscribe to Oneindia Tamil
பொறையார்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மேரி மாதா திருவிழா வியாழக்கிழமை முடிவடைந்தது.
வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில் ஆண்டுதோறும் மேரி மாதாவின் பிறந்த நாள் விழா பெருவிழாவாகக் கொண்டாடப்படும்.இந்த ஆண்டு விழா 11 நாட்கள் நடந்தது. உச்சகட்ட நிகழ்ச்சியாக வியாழக்கிழமை திருத் தேர் பவனி நடந்தது. புனித மேரியின்திருவுருவச்சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்ட அன்னையைவழிபட்டனர்.
இந்தியாவுக்கான திருத் தூதர் ஆர்ச்பிஷப் பெட்ரோ லோபஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் நடந்தது. இந்தியாவின்பல்வேறு மொழிகளிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் பெருவிழா என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வந்து பிரார்த்தனை செய்தனர்.












Click it and Unblock the Notifications