ரயில் கட்டணம் உயரும் எனக் கூறவில்லை: வேலு மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரயில் கட்டணம் உயரும் என்று நான் கூறவில்லை என மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு மறுத்துள்ளார்.
பெங்களூர் வந்திருந்த வேலு அங்கு நடந்த ரயில்வே நிகழ்ச்சியில்க லந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கடந்த இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டபோதிலும், ரயில் கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை. ஆனால்தற்போது அப்படி நிலைமை இல்லை. கட்டணம் உயரக் கூடும் என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் சென்னை திரும்பிய வேலு அங்கு கூறுகையில், ரயில் கட்டணம் உயரும் என்று நான் பெங்களூரில் கூறவில்லை.கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றுதான் தெரிவித்தேன்.
பொதுமக்களின் நலன் கருதி கட்டண உயர்வை ரயில்வே தவிர்த்து வருகிறது. 2ம் வகுப்ப சாதாரண பெட்டிகளில் பயணக்கட்டணத்தில் ஒரு ரூபாயைக் குறைத்துள்ளோம். இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பயணிகள் கட்டணம் மட்டுமன்றி, சரக்கு ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமும் இப்போதைக்கு இல்லை என்றார் வேலு.












Click it and Unblock the Notifications