தமிழக பேருந்துகளுக்கு ஆயுதப் போலீஸ் பாதுகாப்பு
சென்னை:
கேரளாவில் தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும்,அங்கிருந்து தமிழகத்திற்கும் இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானியை விடுதலை செய்யக் கோரிஅவரது ஆதரவாளர்கள், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே தமிழக அரசுப் பேருந்தை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுதீவைத்து எரித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்துதமிழக அரசுப் பேருந்துகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை, நாகர்கோவில், கன்னியாகுமரி,திருநெல்வேலி, பொள்ளாச்சி, கம்பம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு பேருந்துகள்இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக அனுப்பபடுகின்றனர். மேலும், கேரளாவுக்குள் வந்துசெல்லும் தமிழகப் பேருந்துகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு கேரளாவைக் கேட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகப் பேருந்து எரிக்கப்பட்ட கமலசேரிக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சென்றுஆய்வும், விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு மதானியின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதானியின் தந்தைஅப்துல் சமத், மனைவி சுபியா ஆகியோர் கொல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வன்முறை மூலம் மதானியை விடுதலைஆவதை நாங்கள் விரும்பவில்லை.
அவர் விடுதலையாகி வெளியே வர விரும்பாத சிலர்தான் இத்தகைய காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். மதானியின் நலம்விரும்பிகள் யாரும் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications