பழனியைக் கலக்கிய இந்து-முஸ்லீம் ஒற்றுமை!
பழனி:
விநாயகர் ஊர்வலத்தால் இந்தியா முழுவதும் காவல்துறையினர் படு டென்ஷனாக இருக்கும் நேரத்தில், திண்டுக்கல் மாவட்டம்பழனியில் காவல்துறையினரின் டென்ஷனை வெகுவாகக் குறைக்கும் விதமாக, இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்துவிநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் இந்து, முஸ்லீம் சமுதாயத்தினரிடையே ஏதாவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டேதான் இருக்கிறது. இதன் காரணமாக வெட்டுக் குத்தும், கொலைகளும் நடப்பது சாதாரண விஷயமாகி விட்டது.ஆனால் தமிழகம் மட்டும் இதற்கு விதி விலக்கு. இந்துக்களும், முஸ்லீம்களும் இங்கு சகோதர உணர்வுடன், நட்பு பாராட்டி,உறவினர்கள் போல வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக பழனியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பழனியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. ஏராளமான விநாயகர் சிலைகள்நகரின் முக்கியப் பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
இந்த ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவம் நடந்து விடக் கூடாது என்பதற்காக ஏராளமான போலீஸார் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குகள் ஊர்வலம் புகுந்து விடக் கூடாது என்ற டென்ஷனுடன் பணியில்ஈடுபட்டிருந்தனர் காவலர்கள்.
ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக முஸ்லீம் தர்ம பரிபாலன சபை என்ற முஸ்லீம் அமைப்பு நடந்துகொண்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமான முஸ்லீம்கள், அமைப்பின் செயலாளர் ஷாகுல் அமீது தலைமையில் விநாயகர்சிலை ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்து தங்களது பகுதி வழியாக அழைத்துச் சென்றனர்.
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் மாலை அணிவித்து அசத்தி விட்டனர். இந்தக் காட்சியைப் பார்த்த ஊர்வலத்தில்வந்தவர்கள், அப்பகுதி மக்களும் உற்சாகக் கூக்குரலிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். போலீஸாரும் நிம்மதிப் பெருமூச்சைவெளியிட்டனர்.
இப்படியாக, எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications