சென்னையில் நதிகள் இணைப்பு மாநாடு: வாஜ்பாய், அத்வானி பங்கேற்பு
நாமக்கல்:
கங்கை, காவிரி நதிகளை இணைப்பது தொடர்பாக பாஜக சார்பில் வருகிற 17ம் தேதி சென்னையில் மாநாடு நடைபெறுகிறது.இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,வருகிற 15, 16 , 17 ஆகிய தேதிகளில் சென்னையில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் வாஜ்பாய்,அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
17ம் தேதி சென்னையில் கங்கை, காவிரி இணைப்பு தொடர்பான மாநாடு நடைபெறுகிறது. இதிலும், வாஜ்பாய், அத்வானிபங்கேற்கிறார்கள். தீவுத் திடலில் இந்த மாநாடு நடைபெறும்.
சேது சமுத்திரத் திட்டம் தமிழர்களின் நீண்ட நாள் கனவாகும். ஆனால் சுற்றுச்சூழலுக்கும், மீனவர்களின் நலனுக்கும்பாதகமில்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஏழை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவை விட குறைவாகவே உள்ளது.உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாக மத்திய அரசுகூறுகிறது. ஆனால் நம்மை விட ஏழை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை எப்படி குறைவாக உள்ளது என்பதைமத்திய அரசுவிளக்க வேண்டும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications