தேய்ந்து வரும் தமிழ்! காளிமுத்து வருத்தம்
மதுரை:
தமிழகத்தில் தமிழ் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்று சபாநாயகர் காளிமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதுரை தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்க் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா மதுரையில் நடந்தது.இதில் காளிமுத்து கலந்து கொண்டு பேசினார்.காளிமுத்து பேசுகையில், சங்கம் வைத்துத் தமிழ் மொழியை வளர்த்த பெருமைக்குரியது மதுரை. நான்காம் கடை வள்ளல் என்றுபோற்றப்படும் பாண்டித் தேவர், நான்காவது தமிழ்ச் சங்கத்தை வைத்து தமிழை வளர்த்தார். அவருக்கு உரிய இடத்தில், உரியநேரத்தில் சிலை வைக்கப்படும்.
தமிழகத்தில் தமிழைப் பயன்படுத்துவோர் குற்ைநது வருகின்றனர். பிற மொழி மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எங்குமேதமிழ் இல்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் ஆங்கிலமும், இந்தியும்தான் தலை தூக்கி நிற்கின்றன.விமான நிலையங்களிலும் இதே கதிதான்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல வெளிநாட்டு விமான நிலையங்களில் அழகு தமிழில் அறிவிப்பு செய்கின்றனர்.இந்த நிலை மாற வேண்டும். தமிழ் மீது தமிழர்களுக்கு பிடிப்பு வர வேண்டும். தாய் மொழியை மதிக்காதது, தாயையே மதிக்காததுபோலாகும்.
எனது தாயை மதிப்பது போல இன்னொரு தாயையும் நான் மதிக்கிறேன். அவர் முதல்வர் ஜெயலலிதா. இன்னொரு முதல்வரையும்எனக்குப் பிடிக்கும், அவர் செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வர் என்றார் காளிமுத்து.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications