கிருஷ்ணசாமியுடன் இணையும் பாமக எம்.எல்.ஏ.
மதுரை:
பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ வேல்முருகன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கீழ்செயல்படப் போவதாக அறிவித்துள்ளார்.
பாமக சார்பில் வந்தவாசி தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேல்முருகன். தேவேந்திர குல வேளாளர் பேரைவஎன்ற பெயரில் தலித் அமைப்பின் தலைவராகவும் அவர் இருக்கிறார். பாமகவில் தலித்துகள் மிகவும் கேவலமாகநடத்தப்படுவதாக கூறி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, கட்சித் தலைவர் ஜி.கே.மணி ஆகியோரைகடுமையாக முன்பு விமர்சித்தவர் வேல்முருகன்.அன்று முதல் தனித்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தில் சேர்ந்து செயல்படவேல்முருகன் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது சங்கம், பசுபதிபாண்டியன் தலைமையில் இயங்கும் தேவேந்ேதிர குல வேளாளர் சங்கம் ஆகியவை டாக்டர் கிருஷ்ணசாமியின் கீழ் செயல்படமுடிவு செய்யப்பட்டுள்ளது.
வெறும் ஓட்டு வங்கிக்காகவே பாமக என்னைப் பயன்படுத்திக் கொண்டது. சுமை தூக்கும் குதிரைகளாகவே இதுவரை நாங்கள்பயன்படுத்தப்பட்டு வந்தோம். சட்டசபைத் தேர்தலுக்கு மட்டுமே கருணாநிதி சீட் தந்தார். ஆனால் நாடாளுமன்றத்திற்குள்தலித்துகளை அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை.
எங்களை ஜாதி ரீதியாக பார்க்கும் அவர், தீண்டத்தகாத இனமாகவே எங்களை கருதுகிறார். ஆனால் ஜாதி ரீதியாக மட்டுமேஇயங்கும் பாமக குறித்து அவர் ஒரு வார்த்தை கூட கூறுவதில்லை.
எங்களது சங்கத்தின் அரசியல் மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் திருமாவளவன் கலந்துகாள்ளவில்லை. அவரை அழைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் அவர் ராமதாஸை விட்டு வெளியே வர வேண்டும்.தலித் மக்களின் ஓட்டுக்களை சுரண்டுவதற்காகத்தான் அவர் திருமாவளவனை தன்னுடேயே வைத்துக் கொண்டுள்ளார். அதைஅவர் உணர வேண்டும் என்றார் வேல்முருகன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications