நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம்: காலக்கெடு நீட்டிப்பு
சென்னை:
நர்சரிப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான காலக்கெடுவை வருகிற 30ம் தேதி வரைநீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணிகளை விரைவாக கவனிக்க ஒற்றைச் சாளர முறையையும் அவர்அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில்கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, நர்சரி, தொடக்கப் பள்ளிகளுக்குஅங்கீகாரம் பெற வேண்டுமானால் அரசு நிர்ணயிக்கும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும் எனகூறப்பட்டிருந்தது.இந்த வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது, புதுப்பிக்கப்பட மாட்டாது என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த விதிமுறைகளுக்கு உட்படாமல் நடத்தப்படும் பள்ளிகள் மூடப்படும் எனவும்,விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்காக காலக்கெடுவும் அளிக்கப்பட்டிருந்தது. இக்காலக்கெடு ஆகஸ்ட் 31ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல பள்ளிகள் அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்து புதிய அங்கீகாரத்திற்கும், அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும்விண்ணப்பித்தன. ஆனால் சில பள்ளிகள் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளன. இந்தப் பள்ளிகளும்அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்கு வசதியாக காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்துள்ளேன். அதன்படி வருகிற 30ம்தேதி வரை இப்பள்ளிகளுக்கு காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது.
செப்டம்பர் 30ம் தேதிக்குள், அரசின் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாத பள்ளிகள் தங்களது குறைபாடுகளை சரி செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்யாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை மூட உத்தரவிடப்படும்.
அங்கீகாரம் கோருதல், புதுப்பித்தல் போன்ற பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக ஒற்றைச் சாளர முறையையும் நான்அறிமுகப்படுத்தியுள்ளேன். இதற்கான குழு அமைக்கப்படும். இக்குழு, அங்கீகாரம் கோரும் பள்ளிகளுக்கும், புதுப்பிக்கவிரும்பும் பள்ளிகளுக்கும் உரிய சான்றிதழை விநியோகிக்கும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 3,206 அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், 306 பள்ளிகளில் மட்டுமே புதுப்பித்தல் சான்றிதழ்வழங்கப்பட வேண்டியுள்ளது. மேலும், 3629 அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் 2168 பள்ளிகள் அங்கீகாரம் கோரிவிண்ணப்பித்துள்ளன. அப்பள்ளிகளில் ஆய்வுப் பணிகளும் முடிந்து விட்டன.
அரசின் இந்த வாய்ப்பையும் தவற விடும் பள்ளிகள் கண்டிப்பாக மூட உத்தரவிடப்படும். எனவே இப்பள்ளிகளில் பயிலும்மாணவ, மாணவியரின் நலன் கருதி பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுகிறேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications