சிக்கினார் ஐடியலின் இன்னொரு கூட்டாளி!
திண்டுக்கல்:
மோசடி மன்னன் ஐடியல் சுப்ரமணியத்தின் இன்னொரு முக்கிய கூட்டாளியான கிருஷ்ணன் நாயர் என்பவரை போலீஸார்திண்டுக்கல்லில் கைது செய்துள்ளனர்.
பல பேரிடம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி கமிஷன் தொகையாக மட்டும் சில கோடி ரூபாய்களை மோசடி செய்ததாகஐடியல் சுப்ரமணியத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். அருடைய கூட்டாளிகள் முகி, செளந்தர், மணிகண்டன் ஆகியோரும்கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கிருஷ்ணன் நாயர் என்ற இன்னொரு கூட்டாளியும் இப்போது சிக்கியுள்ளார். கிருஷ்ணன் நாயர் கேரளாவைச்சேர்ந்தவர். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தில் வந்து குடியேறினார். அப்போதுஐடியலின் நட்பு கிடைத்துள்ளது.
அதன் பின்னர் பழனியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரை, ஐடியலுக்கு கிருஷ்ணன் நாயர் அறிமுகப்படுத்தி வைத்தார். இதற்காககமிஷனாக கணிசமான தொகையையும் ஜெயகாந்தனிடமிருந்து பெற்றுள்ளார் கிருஷ்ணன் நாயர்.
கடன் தொகையை ஜெயகாந்தன் பலமுறை கேட்டும் நாயர் இழுத்தடித்துள்ளார். தொடர்ந்து ஜெயகாந்தன் பணத்தைக் கேட்டுவற்புறுத்தவே, ஐடியலும், கிருஷ்ணன் நாயரும் சேர்ந்து ஜெயகாந்தனை மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில்தான் ஐடியல் போலீஸில் சிக்கிக் கொண்டார். இதை அறிந்த ஜெயகாந்தன் தற்போது திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் கிருஷ்ணன் நாயரை தேடி வந்தனர்.தலைமறைவாக இருந்து வந்த கிருஷ்ணன் நாயர் செம்பட்டியில் வைத்து போலீஸாரிடம் சிக்கினார். அவர் தற்போது மதுரைசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications