தேர்தலுக்கு ரெடி! ராஜ.கண்ணப்பன் அறிவிப்பு!
சென்னை:
சட்டசபைத் தேர்தலை சந்திக்க மக்கள் தமிழ் தேசம் தயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராஜ. கண்ணப்பன் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது உருவான கட்சி மக்கள் தமிழ் தேசம். ஜாதிக் கட்சியான மக்கள் தமிழ் தேசம், கடந்த தேர்தலில்திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஒரு சீட் மட்டுமே இக்கட்சிக்கு திமுக கொடுத்து. அந்த இடத்திலும் ராஜகண்ணப்பனே போட்டியிட்டார், தோல்வியைத் தழுவினார்.தற்போதும் திமுக கூட்டணியில் இருக்கும் ராஜ கண்ணப்பன், சமீப காலமாக விஜயகாந்த் குறித்துப் பேட்டியளித்து வருகிறார்.விஜயகாந்த்தால் தங்களது கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படாது என்று தொடர்ந்து அவர் கூறி வருகிறார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுவரை 25 மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திமுடித்து விட்டோம். கடைசிக் கட்டமாக 5 மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
செயல்வீரர்கள் கூட்டத்திற்குப் பினஅனர் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட மாநாடு நவம்பர் மாதம் நடைபெறும்.சட்டசபைத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
எங்களது ஓட்டு வங்கி அப்படியே சிந்தாமல், சிதறாமல் உள்ளது. இதை ஓட்டுக்களாக மாற்றுவது குறித்து செயல்வீரர்கள் மற்றும்மாவட்ட கூட்டங்களில் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எடுத்துரைக்கிறோம்.
விஜயகாந்த் புதுக் கட்சி தொடங்குவதால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. கட்சி தொடங்குவது அவரது விருப்பம்.அதையாரும் தடுக்க முடியாது. ஏற்கனவே தற்போதுள்ள கட்சிகளிடம் 85 சதவீத வாக்காளர்கள் உள்ளனர். எனவே புதிதாக கட்சிதொடங்குபவர்களால், ஏற்கனவே இருப்பவர்களுக்கு ஒரு நஷ்டமும் வராது. திமுக கூட்டணியின் ஓட்டுக்கள் அப்படியே உள்ளனஎன்றார் ராஜ கண்ணப்பன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications