கருணாநிதி சொன்ன நடராஜர் கதை!
சென்னை:
சென்னையில் நடந்த பாரதி விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, நடராஜர் குறித்தும், பரத நாட்டியம் குறித்தும்விரிவாகப் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பன்முகம் கொண்ட திமுக தலைவர் ஒரு நாத்திகவாதியும் கூட. ஆனால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாரதிக்கு ஒருபரதாஞ்சலி என்ற நிகழ்ச்சியில் அவர் ஆத்திகவாதியாக மாறி பரதநாட்டியம் குறித்தும், நடராஜர் குறித்தும் விரிவாகப் பேசிஅனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.வாணிமஹாலில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பாரதி கலைக்கூடம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில், கருணாநிதி பேசுகையில்,பரதம் என்ற சொல்லில் ப எழுத்தை நீக்கி விட்டால், ரதம் என்று வரும். அதாவது ரதம் போல பரதத்தை ஆட வேண்டும். ரஎழுத்தை நீக்கி விட்டால் பதம் என்று வரும். பதம் இல்லாமல் பரதம் இல்லை.
அதேபோல பதம் என்ற எழுத்தில் துணை எழுத்து சேர்த்தால் பாதம் என்று வரும். பாதம் இல்லாமல் பரதம் ஆட முடியாது. பரஎன்ற எழுத்தை நீக்கி விட்டால் தம் என்று வரும். பரதம் ஆட தம் வேண்டும். இப்படி அனைத்து சிறப்புகளையும் பெற்றால்தான்நல்ல முறையில் பரதம் ஆட முடியும்.
பரதம் ஆதி காலத்து நாட்டியக் கலை. அது எப்போது, எங்கு தோன்றியது என்பதை இன்னும் ஆராய்ந்து கொண்டுதான்இருக்கிறார்கள்.
பரதநாட்டியம் நடக்கும் இடத்தில் நடராஜர் சிலை வைத்திருப்பார்கள். இந்த சிலையில் பல்வேறு அபிநயங்கள் இடம்பெற்றிருக்கும். நடராஜரின் கழுத்தில் பாம்பு இருக்கும், இது பாம்பு போல நெளிந்து ஆட வேண்டும் என்பதைக் குறிக்கும்.கையில் உடுக்கை இருக்கும். பரதம் ஆடுபவரின் இடுப்பு உடுக்கை போல இருக்க வேண்டும் என்பதற்காக அது.
நடராஜர் சிலையில் வட்டம் இருக்கும்.அனைத்து அடிகளையும் இணைத்து கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பதை இதுகுறிக்கும். இப்படி பல விஷயங்களை அது நமக்கு உணர்த்துகிறது.
நாட்டியத்துக்கு தெய்வீக உவமைகளை கூறுவதாக நினைக்க வேண்டும். கலை நயத்துக்காகவே இதைக் கூறினேன். எனக்குஉண்மையில் தெய்வ நம்பிக்கை கிடையாது. ஆனால் நாத்திகவாதியாக இருந்து கொண்டே என்னால் ஆத்திகமும் பேச முடியும்.மற்றவர்களுக்கு இரவலாக தரவும் தயாராக இருக்கிறேன் என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் இந்தப் பேச்சு கூடியிருந்தோர் மத்தியில் பெரும் கைத்தட்டலை வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டு விழாவின்போது திருவாசகம் குறித்து விலாவரியாகப் பேசிஅனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications