மதானி ஆதரவாளர்கள் மிரட்டல்: சேலம் போலீஸ் உஷார்!
சேலம்:
எர்ணாகுளத்தில் தமிழகப் பேருந்து எரிக்கப்பட்டது போல சேலம் பேருந்து நிலையத்திலும் பேருந்துகளை குண்டு வைத்துத்தகர்ப்போம் என்று மதானியின் ஆதரவாளர்கள் மிரட்டியதால் சேலம் பேருந்து நிலையங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை மதானியின் ஆதரவாளர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கடத்திச்சென்று தீவைத்துக் கொளுத்தினர். இந்த சம்பவம் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் மதானியின் ஆதரவாளர்கள் புதிய மிரட்டல்ஒன்றை விடுத்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகஅலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த அழைப்பை ஊழியர் ஷீலா எடுத்து பேசியுள்ளார். அதில் பேசியவர், எர்ணாகுளத்தில் மட்டும் இல்லை, சேலத்திலும்நாங்கள் பேருந்துகளை குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று மலையாளத்தில் கூறி விட்டு வைத்துள்ளார்.
ஷீலா மலையாளி என்பதால், தொலைபேசியில் வந்த தகவலைப் புரிந்து கொண்டு அதுகுறித்து அதிகாரிகளிடம் உடனடியாகத்தெரிவித்தார். இதையடுத்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸ் படை கிளம்பி வந்து பேருந்து நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தியது. மோப்ப நாய்கள்,வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகளுடன் வந்த அவர்கள் பேருந்து நிலையம் முழுவதையும் சல்லடை போட்டுசோதனையிட்டனர்.
புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பழைய பேருந்து நிலையப் பகுதியிலும் போலீஸார்நிறுத்தப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும், வந்து செல்லும் பேருந்துகளில் தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications