மாநாட்டுக்கு வாங்கண்ணே ..! காவல்துறையினருக்கும் அழைப்பு!
மதுரை:
மதுரையில் புதன்கிழமை நடைபெறவுள்ள விஜயகாந்த் ரசிகர் மன்ற முதலாவது மாநில மாநாட்டுக்கு வருமாறு டி.எஸ்.பிக்கள்,இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறையினருக்கும் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நேரில் போய்அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.
விஜயகாந்த்தின் புதிய அரசியல் கட்சித் தொடக்க விழா தொடர்பாக அரசியல் தலைவர்கள் முதல் பல் துறைப் பிரமுகர்கள் வரைவிஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். பல இடங்களில் அழைப்பிதழை பிரமாண்ட டிஜிட்டல்பேனர்களாக மாற்றி ரசிகர்கள் வைத்துள்ளனர்.ஆனால் இந்த பேனர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி போலீஸார் அவற்றை அகற்றி விட்டனர். மதுரை நகர்மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இதுபோல ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது மாநாட்டு பந்தல் உள்ளஇடத்தில் மட்டுமே இத்தகைய பேனர் உள்ளது.
பேனர்கள் அகற்றப்பட்டதைக் கண்டித்து ரசிகர்கள் சில இடங்களில் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால்அவர்களை அடக்கிய ரசிகர் மன்ற தலைமைக் கழகம், காவல்துறையினருடன் எக்காரணம் கொண்டும் மோதக் கூடாது. அவர்கள்கூறுவதை கேளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், காவல்துறை அதிகாரிகளுக்கு மன்ற நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.இதையடுத்து மதுரை மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள், டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள்உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் பார்த்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.
விஜயகாந்த் மன்றத்தினரின் இந்த அழைப்பு காவல்துறையினரிடையே இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications