பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது: த.மு.மு.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்டுள்ளது, கோவை குண்டுவெடிப்ப வழக்கை திசை திருப்பும் செயல். வன்முறை மூலம்எதற்கும் தீர்வு காண முடியாது என்று தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கூறியுள்ளது.இதன் தலைவர் ஜவாஹிருல்லாஹ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளாவில் தமிழக அரசுப் பேருந்து தீ வைத்துஎரிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. கோவை குண்டு வெடிப்பு வழக்கை திசை திருப்பும் வகையில்தான் இந்த சம்பவம்நடந்துள்ளது.
வன்முறை மூலம் எதற்கும் தீர்வு காண முடியாது. இப்பிரச்சினையில் அரசு தலையிட்டு கோவை சிறையில் 7 ஆண்டுகளுக்கும்மேலாக அடைக்கப்பட்டுள்ள குண்டுவெடிப்புக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்ஜவாஹிருல்லாஹ்.












Click it and Unblock the Notifications