கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை:
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதாமுன்னிலையில் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.
சென்னை நகர குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.இத்திட்டத்திற்கு ரூ. 1000 கோடி தருவதாக மத்திய அரசும் அறிவித்தது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் இத்திட்டம்ஒப்பந்தமாவது தடைபட்டு வந்தது.இந்த நிலையில் இன்று காலை இத்திட்டம் தொடர்பான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தலைமைச் செயலகத்தில்கையெழுத்தானது. தமிழக அரசின் சார்பில் சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம், திட்டத்தை நிறைவேற்றப்போகும் ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்டமைப்பு மற்றும் திட்டம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இத்திட்டம் சென்னை அருகே உள்ள மீஞ்சூரில் நிறுவப்படும். தினசரி 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை ஹைதராபாத் நிறுவனம்சுத்திகரித்து குடிநீராக்கித் தரும். அதை சென்னை குடிநீர் வாரியம் பெற்றுக் கொள்ளும்.
மீஞ்சூரில் இதற்காக 60 ஏக்கர் நிலம் ஹைதராபாத் நிறுவனத்திற்குத் தரப்படும். இந்த நிறுவனம் திட்டத்தை செயல்படுத்துவதற்கானதொழில்நுட்ப உதவிகளையும், கருவிகளையும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெஃபீசா கட்டுமான நிறுவனத்திடமிருந்து பெறும்.கடல் நீரைக் குடிநீராக்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாக இது திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டம் தொடங்கப்பட்ட 15 மாதங்களில் அது நிறைவு பெறும். அதன் பின்னர் சென்னைக் குடிநீர் வாரியத்திற்குசுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் வழங்கப்படும். 25 ஆண்டுகளுக்கு குடிநீராக்கப்பட்ட கடல் நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்குவழங்கப்படும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தேவைக்கேற்றபடி ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications