18 மாதக் குழந்தையை விற்க முயன்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
18 மாதக் கைக் குழந்தையை வெறும் 1000 ரூபாய்க்கு விற்க முயன்ற 55 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கெங்குசாமி ராமச்சந்திரன். இவர் காயிரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஒருபெண் மற்றும் அவருடன் வந்தவர்களுடன் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு பேரம் பேசிக் கொண்டிருந்தார்.இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம்விசாரணை நடத்தியபோது, கெங்குசாமியின் கையில் இருந்தது 18 மாதக் கைக்குழந்தை எனத் தெரியவந்தது. அக்குழந்தையை1000 ரூபாய்க்கு விற்பதற்காக பேரம் பேசிக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
செங்கல்பட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியிடமிருந்து 1000 ரூபாய் கொடுத்து இக்குழந்தையை வாங்கியதாகவும் கெங்குசாமிகூறியுள்ளார். ஆனால் அக்குழந்தையை கெங்குசாமி திருடியிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர்.
கைது செய்யப்பட்ட கெங்குசாமியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தை சமூக சேவைநிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications