காங். இருந்தால்தான் திமுக ஜெயிக்க முடியும்: ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறாத காரணத்தால்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியதுஎன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களைமத்திய அரசுதான் ஏற்படுத்தியது. ஆனால் ஏதோ தாங்கள்தான் அந்தக் குழுக்களை உருவாக்கி, வளர்த்து வருவது போலக் காட்டிக்கொள்கிறது அதிமுக அரசு.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தங்களது அரசுதான் பாதுகாவலர்கள் போல நினைக்கிறது அதிமுக அரசு. சமீபத்தில்சிவகங்கையில் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் மாநாட்டை நான் நடத்தினேன். அதில் கலந்து கொள்ள முடியாமல் பலகுழுக்களை அரசு தடுத்துள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனில் உள்ள மானியத்தில் 75 சதவீதத்தை மத்திய அரசுதான் வழங்குகிறது.மாநில அரசின் பங்கு 25 சதவீதம்தான். இதை மக்களும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் நேரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்திக் கொள்ள அதிமுக அரசு நினைக்கிறது. இதற்கு சுய உதவிக் குழுஉறுப்பினர்கள் உடன்படக் கூடாது.

கடந்த முறை இருந்த திமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. ஆனால் 2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவால் வெற்றி பெறமுடியவில்லை. காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இல்லாத காரணத்தால்தான் அவர்களால் வெல்ல முடியவில்லை. அதை ஜெயலலிதாபயன்படுத்திக் கொண்டார். அவர் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு விபத்து.

மக்களவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்ததால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மத்தியிலும்ஆட்சி அமைத்தோம்.

ஜெயலலிதா அறிவித்து வரும் சலுகைகளால் மக்களுக்கு ஒரு லாபமும் கிடைக்காது. மாறாக, மாநிலத்தின் வளர்ச்சிதான்பெருமளவில் பாதிக்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். இது இதுவரை இல்லாத வாய்ப்பு.இந்த வாய்ப்பை அதிமுக அரசு பயன்படுத்திக் கொண்டு மாநில நலனுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்என்றார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+