ஆம்னி பஸ் கட்டணம் கிடு கிடு உயர்வு!
சென்னை:
டீசல் விலை உயர்வு காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது.
மத்திய பெட்ரோலியத் துறை சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை பேருந்துக் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.இருப்பினும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கணிசமாக உயர்ந்து விட்டது. அதேபால ஆட்டோ கட்டணத்தையும்ஓட்டுநர்கள் உயர்த்தி விட்டனர். இதனால் நடுத்தர வர்க்க மக்கள் மேலும் நிதிச் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் ரூ. 10 முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. சாதாரண வகை ஆம்னி பேருந்துகளில் ரூ. 10ம்,சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளில் 30 ரூபாயும் கட்டணம் உயர்ந்துள்ளது. பார்சல்கள் எடுத்துச் செல்லும் கட்டணமும் கணிசமாகஉயர்ந்துள்ளது.
பெங்களூரிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் உயர்ந்துள்ளது.சென்னைக்கு செல்லும் சாதாரண வகை பேருந்துகளில் முன்பு ரூ. 350 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அது ரூ. 360 ஆகஉயர்ந்துள்ளது.
ரயில் கட்டணம் இதுவரை உயர்த்தப்படாத காரணத்தால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று தென்னகரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications