சமரசத்திற்குப் பின் சென்னை வரும் வாஜ்பாய், அத்வானி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதன்லால் குரானாவால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குப் பின்னர், சமரசம் செய்யப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமர்வாஜ்பாயும், பாஜக தலைவர் அத்வானியும் சென்னையில் 3 நாள் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டாக கலந்து கொள்ளவுள்ளனர்.

டெல்லி முன்னாள் முதல்வரும், பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான மதன்லால் குரானா, அத்வானி குறித்துதெரிவித்த சில கருத்துக்களால் பாஜகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து குரானாவை 6 ஆண்டுகளுக்கு நீக்கிஅத்வானி உத்தரவிட்டார்.

அத்வானியின் இந்த முடிவுக்கு வாஜ்பாய் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். குரானா நீக்கம் சரியல்ல என்றும் அவர் கருத்துதெரிவித்தார். ஆனால் எடுத்த முடிவு எடுத்ததுதான் என்று அத்வானி திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இதனால் குரானா,அத்வானி மோதல், வாஜ்பாய், அத்வானி மோதலமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி இடையேசமரசம் ஏற்படுத்தினர். இதன் விளைவாக, அத்வானியிடம் மன்னிப்பு கேட்குமாறு குரானாவுக்கு வாஜ்பாய் உத்தரவிட்டார். இதைகுரானாவும் ஏற்றுக் கொண்டு அத்வானிக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். இதைத் தொடர்ந்து குரானாவை நீக்கும்முடிவைவாபஸ் பெற்றார் அத்வானி.

இந்தக் குழப்பம் காரணமாக சென்னையில் வருகிற 16ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுவதாக உள்ள பாஜக தேசியசெயற்குழுக் கூட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்தது. ஆனால் தற்போது தலைவர்களிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் கூட்டம் நிச்சயம் நடைபெறும் எனத் தெரிய வந்துள்ளது.

சமரசம் செய்யப்பட்ட பின்னர் வாஜ்பாயும், அத்வானியும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் பாஜக ஆளும் மாநிலமுதல்வர்களான நரேந்திர மோடி (குஜராத்), அர்ஜூன் முண்டா (ஜார்க்கண்ட்), வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்), பாபுலால்கெளர் (மத்திய பிரதேசம்), ரமன் சிங் (சட்டீஸ்கர்) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இங்கு பாஜகவின்அனைத்துத் தலைவர்களும், 5 மாநில முதல்வர்களும் வரவுள்ளதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்களான இல.கணேசன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அடங்கியவரவேற்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மகளிர் அணி சார்பில் பெண்களை வரவேற்பதற்காக லலிதா குமாரமங்கலம்தலைமையில் பெண் நிர்வாகிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாஜ்பாயும், அத்வானியும், 17ம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெறும்கங்கை-காவிரி இணைப்பு மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+