விஜயகாந்த்துக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை!
சென்னை:
வன்னியர்கள் மீதுள்ள கோபத்தை தீர்த்துக் கொள்வதற்காகவே, இயக்குநர் தங்கர்பச்சானை மன்னிப்பு கேட்க வைத்துஅவமானப்படுத்தியுள்ளார் நடிகர் விஜயகாந்த். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கத் தலைவர்ஏ.கே.நடராஜன் கூறியுள்ளார்.
ஏ.கே.நடராஜனும், காப்பாளர் தீரனும் (முன்பு பாமகவில் இருந்தவர்) செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்டப் பஞ்சாயத்துநடத்துதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களை கடுமையாகதண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.இந்த நிலையில், இயக்குநர் தங்கர்பச்சானை நடிகர் சங்க நிர்வாகிகள், கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டி மன்னிப்பு கேட்கவைத்துள்ளனர். இவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்னியர் சமுதாயத்தினர் மீது விஜயகாந்த்ஒட்டுமொத்தமாக காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதால்தான் அதை வெளிக்காட்ட தங்கர்பச்சானை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
தங்கர்பச்சான் வன்னியர் என்பதால் அவரை நடிகர் சங்கத்திற்குக் கட்டாயப்படுத்தி வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.இதனால் விஜயகாந்த் வன்னியர்களை தூண்டி விட்டு விட்டார். தனது செயலுக்காக வன்னியர்களிடம் விஜயகாந்த் மன்னிப்புகேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க விஜயகாந்த் தவறினால் வன்னியர்கள் தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆளுவதால், அந்த ஒரே காரணத்துக்காக முரசொலி மாறனுக்கு தபால் தலை வெளியிட்டார்கள்.ஆனால், காஙிகரஸ் கட்சிக்கு தமிழகத்தில் உயிர் கொடுத்து வளம் சர்த்த மாணிக்க வேல் நாயக்கர், ராமசாமி படையாச்சி,வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு தபால் தலை வெளியிடப்படவில்லை.
பிற மாநிலங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆளுநர் பதவியை அள்ளிக் கொடுத்து கெளரவப்படுத்தும் காங்கிரஸ் கட்சி,தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த காங்கிரஸுக்காக உழைத்த மூத்த தலைவர்களான திண்டிவனம் ராமமூர்த்தி,கிருஷ்ணசாமி ஆகியோருக்கு ஆளுநர் பதவி வழங்கி கெளரவப்படுத்த தவறி விட்டது.
வன்னியர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைப்பதை இங்கே ஒருவர் நந்தி போல அமர்ந்திருந்து தடுத்து வருகிறார். ஐக்கியமுற்போக்குக் கூட்டணியின் பெரியண்ணன் யாராக இருந்தாலும், அவருக்கு வன்னியர் சமுதாயம் வரும் சட்டசபைத் தேர்தலில்தக்க பாடம் புகட்டும் என்று அவர்கள் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications