வர்றாரு, வர்றாரு, விஜயகாந்த் வர்றாரு!
மதுரை:
![]() |
கேப்டன், தென் பாண்டிச் சிங்கம், கருப்பு எம்.ஜி.ஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் மதுரையில் நாளைதனது அரசியல் பிரவேசத்தை அரங்கேற்றுகிறார். தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மதுரையில் குவியத்தொடங்கியுள்ளதால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தமிழகத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட தமிழ் சினிமா ஏணியாக இருந்துவருகிறது. குறிப்பாக அரசியலில் அடையாளம் பெற்ற பலருக்கும் சினிமா பெரும் உதவியாக இருந்துள்ளது.
![]() |
சினிமாவிலிருந்து அரசியலுக்குப் போன பலர், எம்.எல்.ஏ, எம்.பி. என பதவிகளை வகித்துள்ளனர், வகித்து வருகின்றனர். ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர்., திரைப்படங்கள் மூலம் கிடைத்த மிகப் பெரிய பாப்புலாரிட்டியை வைத்துத்தான் அதிமுகவை
ஆரம்பித்து தமிழக முதல்வராக பல காலம் கோலோச்சினார். திமுக தலைவர் கருணாநிதியும், எத்தனையோ புகழ் பெற்றதிரைப்படங்களுக்கு வசனம் எழுதி மக்களின் மனதை வசீகரித்தார்.
இந்தப் பட்டியல் மிகப் பெரியது. இருப்பினும் சினிமா புகழை சரியான முறையில் மாற்றத் தெரியாமல் அரசியலில்தோற்றவர்களும் தமிழகத்தில் அதிகம். சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ாரஜேந்தர் என பலரை உதாரணத்திற்குச் சொல்லலாம்.சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இதே பயத்தால்தான் அரசியலுக்கு வரும் எண்ணத்தை விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
![]() |
இப்படிப்பட்ட பின்னணி கொண்ட தமிழக அரசியல் வரலாற்றில் இன்னும் ஒரு மைல் கல்லாக நடிகர் விஜயகாந்த்,திரையுலகிலிருந்து, அரசியல் கடலில் நாளை இறங்கவுள்ளார். விஜயகாந்த் அரசியலுக்கு வருவதை வெளிப்படையாகவேசொல்லி விட்டுத்தான் வருகிறார். நிச்சயம் வருவேன், ஆனால் இப்போது இல்லை என்று முன்பு கூறிக் கொண்டிருந்தார்விஜயகாந்த்.
ஆனால் திடீரென தனது மனதை மாற்றிக் கொண்ட அவர் செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் தனது அரசியல் பிரவேசம்நடைபெறும் என அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் கொடுத்துள்ளது.
விஜயகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த தினம் முதலே மாநாடு தொடர்பான வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டனர்ரசிகர்கள். மாநாட்டுப் பந்தல் அமைப்பது முதற்கொண்டு அத்தனை வேலைகளையும் ரசிகர்கள் இழுத்துப் போட்டுச் செய்து வந்தார்கள்.
இதோ, அந்த நாளும் விட்டது. நாளை மதுரை திருநகர் அருகே நடைபெறவுள்ள பிரமாண்டமான மாநாட்டில் விஜயகாந்த் தனதுஅரசியல் கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் வெளியிடவுள்ளார்.
மிக மிக அழகாக திட்டமிட்டு, அனைத்துப் பணிகளையும் பக்காவாக செய்து விட்டுத்தான் விஜயகாந்த் தனது கட்சியைஆரம்பிக்கிறார். முதல் கட்டமாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை, கட்சி நிர்வாகிகளாக மாற்றும் வேலை நடந்தது. பின்னர் மகளிர் அணி,வக்கீல்கள் அணி, தொழிலாளர் அணி என அனைத்து அணிகளும் நியமிக்கப்பட்டன.
![]() |
தொண்டர் படை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொண்டர் படையினருக்கு முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டுஅட்டகாசமாக பயிற்சியும் தரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாணியை அப்படியே விஜயகாந்த்பின்பற்றுகிறார். எதைச் செய்தாலும் திட்டமிட்டுச் செய்வது திமுகவின் பாணி. அதைத்தான் விஜயகாந்த்தம் அப்படியே பின்பற்றுகிறார்.
மாநாட்டில் கலந்து கொள்ள வரும் ரசிகர்களுக்கும், ஏகப்பட்ட உத்தரவுகளை விஜயகாந்த் பிறப்பித்துள்ளார்.மது அருந்தி விட்டுவரக் கூடாது, மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களில் வரக் கூடாது, தேவையில்லாத கோஷங்கள் போடக்கூடாது, யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்துப் பேசக் கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகளை ரசிகர்களுக்கு உத்தரவாகஅவர் பிறப்பித்துள்ளார்.
விஜயகாந்த்தின் அரசியல் அறிவிப்பு தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மத்தியில் பெரும்பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏர்படுத்தியுள்ளன. காரணம், இரு கட்சிகளையும் சேர்ந்த சில மூத்த தலைவர்கள், தற்போதையமுக்கியப் பிரமுகர்கள் சிலர், விஜயகாந்த்துடன் இணைய காத்திருப்பதாக வெளியாகும் செய்திகள்தான்.
இரு கட்சிகளிலும் ஓரம் கட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ள பல முக்கியத் தலைவர்கள் இப்போதே விஜயகாந்த்துடன் பேசிவிட்டதாகவும், கட்சிப் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர், சட்டசபைத் தேர்தலையொட்டி கட்சிக்குள் அழைப்பதாக அவர்களிடம்விஜயகாந்த் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர, விஜயகாந்த்துக்கு பின்னணியில் உள்ள ரசிகர் பட்டாளம், அவர் சார்ந்துள்ள தெலுங்கு சமுதாய மக்களின் வாக்குகள்ஆகியவையும், திமுக, அதிமுகவுக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளன. இன்னொரு கட்சியும் விஜயகாந்த்தின் பிரவேசத்தால் பெரும்பீதியில் ஆழ்ந்துள்ளது. அது வைகோவின் மதிமுக.
![]() |
மதிமுக, தெலுங்கு பேசும் நாயுடு, ரெட்டியார் சமூகத்தின் பெரும் ஆதரவால்தான் ஓரளவுக்கு வளர்ந்துள்ளது. வைகோ, திமுகவைவிட்டு வெளியே வந்தபோது, இந்த சமூகத்தினர்தான் அவருக்கு பக்க பலமாக இருந்தனர். நிதியுதவியையும் கணிசமாக செய்தனர்.இதன் காரணமாகவே கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் தெலுங்கு பேசுவோரை அதிக அளவில் நியமித்தார் வைகோ.
தற்போது விஜயகாந்த்துக்கு, வைகோவை விட பாப்புலாரிட்டி அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால், அவருக்குதங்களது ஆதரவை தெலுங்கு மக்கள் அதிகம் தருவார்கள் என்ற செய்தி வைகோவிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதுதவிர பாமகவும் விஜயகாந்த்தால் ஓரளவுக்குப் பாதிக்கப்படும் என்கிறார்கள். காரணம், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராகஇருந்தாலும், விஜயகாந்த்துக்கு வட தமிழகத்தில், அதாவது வன்னியர்கள் அதிகம் உள்ள வட மாவட்டங்களில் கணிசமானஅளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் பாமகவின் கலக்கத்திற்குக் காரணம்.
தென் தமிழகத்தை விட வட தமிழகத்தில்தான் விஜயகாந்த்துக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான், பாமகவுக்கும்,விஜயகாந்த்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டபோது, தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில்தான் விஜயகாந்த்ரசிகர்களுக்கும், பாமக தொண்டர்களுக்கும் பெரிய அளவில் மோதல் வெடித்தது.
இப்படி அத்தனை முக்கிய அரசியல் கட்சிகளிலும் ஓரளவு பாதிப்பை விஜயகாந்த் ஏற்படுத்துவார் என்பதால் அவரது அரசியல்பிரவேசம் அத்தனை கட்சிகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக இந்த நிலை, தேர்தல்நெருங்கும்போது விஜயகாந்த்துக்கு என்ன மாதிரியான ஆதரவு இருக்கும் என்பதை திட்டவட்டமாக கூற முடியாத நிலை உள்ளது.
![]() |
இன்னொரு விஷயமும் விஜயகாந்த் குறித்த பயத்தை அரசியல் கட்சிகளிடம் அதிகப்படுத்தியுள்ளது. எந்தக் கட்சியுடனும் கூட்டணிவைக்க மாட்டேன், முதல்வர் பதவி எனது லட்சியம் அல்ல, மக்களுக்கு ஒரு மாற்று தேவைப்படுகிறது, அந்த மாற்றத்தை நான்நிச்சயம் கொடுப்பேன், என்ன முடிவு ஏற்பட்டாலும் தனித்தே போட்டியிடுவோம் என்று விஜயகாந்த் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
விஜயகாந்த்தின் இந்தப் பேச்சு தமிழக மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலைப்பொருத்தவரை தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் தைரியம் எந்தக் கட்சியிடமும் இல்லை. கூட்டணி சேர்ந்து கூட்டாகஅதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில்தான் முக்கியக் கட்சிகள் பலவும் சிந்திக்கின்றன. மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றுஇப்போது எதையும் கூற முடியாது என்பது மக்கள் எண்ணம்.
எனவே மக்கள் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் விஜயகாந்த் பேசி வருவதால் அவரது பேச்சு மக்கள் மத்தியிலும்கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவும் அரசியல் கட்சிகளின் கலக்கம் அதிகரிக்க ஒரு காரணம்.
இப்படி ஆரம்பத்திலேயே படு வித்தியாசமாக நடைபோடத் தொடங்கியிருப்பதால் விஜயகாந்த் ஆரம்பிக்கப் போகும் கட்சிக்குமக்கள் மத்தியில் நிச்சயம் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கும் என அனைத்துக் கட்சிகளுமே பயத்துடன் ஆமோதிக்கின்றன.
![]() |
விஜயகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து மூத்த தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இதுவரைவெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள், ராஜகண்ணப்பன், திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற அடுத்த கட்ட தலைவர்கள் அவ்வப்போது ஏதாவது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் எல்லோருக்கும் விஜயகாந்த் அளிக்கும் ஒரே பதில், பொறுத்திருந்து பாருங்கள், தப்புக் கணக்கு போடாதீர்கள் என்பதுமட்டுமே. இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அநாவசியாக பேசாதவர் என்ற எண்ணத்தை விஜயகாந்த்பெற்று வருகிறார்.
இன்னொரு விஷயத்திலும் விஜயகாந்த் அரசியல்வாதிகளுக்கு பயத்தை கொடுக்கிறார். தமிழகத்தைப் பொருத்தவரை அண்ணாஎன்றால் அவர் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்குச் சொந்தமானவர், எம்.ஜி.ஆர். என்றால் அதிமுகவுக்குச் சொந்தமானவர்,காமராஜர் என்றால் காங்கிரஸுக்குச் சொந்தமானவர் என்ற மரபு இருந்து வருகிறது.
இதிலும் புகுந்து விளையாடியுள்ளார் விஜயகாந்த். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரைத் தனது தலைவர்களாக அவர்வரித்துக் கொண்டுள்ளார். இவர்களோடு பெரியாரையும் சேர்த்துக் கொண்டுள்ளார். இந்த நான்கு தலைவர்களையும் தனது
தலைவர்களாக அறிவித்துள்ள விஜயகாந்த், இவர்களது பெயரில் மாநாட்டு மேடை, பந்தல், நுழைவாயில் ஆகியவற்றைஅமைத்துள்ளார்.
இப்படி அத்தனை விஷயங்களிலும் அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகாந்த்தின் அரசியல்பிரவேசத்தை தமிழகம் பலத்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளது.
![]() |
அவரது கட்சியின் பெயர் என்ன, அவர் அறிவிக்கப் போகும் திட்டங்கள் என்ன, புதிதாக என்ன சொல்லப் போகிறார்,வித்தியாசமாக எதையும் செய்வாரா, சொல்வாரா என்ற கேள்விகள் மக்கள் மனதில் கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டுள்ளன.
அத்தனை கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விஜயகாந்த் புதன்கிழமை மாலை பதில் சொல்லப் போகிறார் மதுரை மாநாடுமூலமாக. வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் வரிசையில் விஜயகாந்த் சேருவாரா என்பதை அவர் அறிவிக்கப் போகும்கொள்கைகள், திட்டங்கள் நிர்ணயம் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
விஜயகாந்த் - பயோ டேட்டா
இயற்பெயர்: விஜயராஜ்.
தந்தை பெயர்: அழகிரிசாமி.
தாயார் பெயர்: ஆண்டாள்.
பிறந்தது: மதுரையில், தேதி - 25.8.1952.
மனைவி: பிரேமலதா, மணந்தது: மதுரையில், தேதி: 31.1.1990.
மகன்கள்: 2, விஜய் பிரபாகரன், சண்முகப் பாண்டியன்.
சகோதரர்கள்: 5, சகோதரிகள்: 5.




















Click it and Unblock the Notifications