கைதிகள் சித்திரவதை: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை:
சென்னை காவல் நிலையத்தில் 4 விசாரணைக் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழக காவல்துறை தலைவர்(டிஜிபி) அலெக்சாண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த நீலாங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தன், முருகன், கிருஷ்ணன். இவர்கள் மூவரும் திருட்டுவழக்கில் கைது செய்யப்பட்டனர். திருடிய பொருட்களை மீட்பதற்காக அவர்களை செங்கை கிழக்கு மாவட்ட போலீஸார்உத்தண்டி கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது 3 பேரும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பிக்க முயன்றபோது தங்களை தாக்க முயன்றதால் தற்காப்புக்காகசுட்டுக் கொன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் போலீஸார் வேண்டும் என்றே 3 பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணன், முருகன் ஆகியோரின் சகோதரி பொம்மி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ்மனுவைத் தாக்கல் செய்தார். தங்களது சகோதரர்கள் உள்பட 3 பேரையும் போலீஸார் வேண்டும் என்றே கொன்று விட்டனர்.இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த நிலையில் பொம்மியின் கணவர் நீலகண்டன், உறவினர்கள் ராமு, முருகன், குப்பன் ஆகிய நான்கு போரை போலீஸார்திடீரென கைது செய்தனர். நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை என்ற பெயரில்சித்திரவதை செய்ததாக கூற்பபடுகிறது.
இதையடுத்து பொம்மி இன்னொரு ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், நான்கு பேரையும் போலீஸார்சித்திரவதை செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் பி.டி.தினகரன், கிருஷ்ணன் ஆகியோர் விசாரணைநடத்தி நான்கு பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
இந்தச் சூழ்நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொம்மி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட நான்கு பேரையும் விடுவிக்காமல், 2 பேரை மட்டும் போலீஸார் விடுவித்துள்ளனர். இதுநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்றார்.
இதைக் கேட்டதும் இரு நீதிபதிகளும் கோபமடைந்தனர். தமிழக அரசின் போக்கு மிகவும் கண்டனத்துக்குரியது என்று அவர்கள்தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் துரைசாமி, நான்கு பேர் விடுதலை குறித்து விசாரித்து தகவல்தெரிவிப்பதாக கூறினார். மேலும், குப்பன், முருகன் ஆகியோர் மீது வேறு வழக்குகள் இருப்பதால் அவர்களை விடுதலைசெய்யவில்லை என்றார்.
ஆனாலும் கோபம் தணியாத நீதிபதிகள், நாங்கள் உத்தரவிட்டும் கூட அவர்களை விடுவிக்கவில்லையென்றால் எப்படி?அவர்கள் மீது வேறு என்ன வழக்கு உள்ளது என்பதை நீதிமன்றத்தில் தெரிவியுங்கள். இதுகுறித்து டிஜிபி நேரில் ஆஜராகிவிளக்கம் தர வேண்டும். இல்லையென்றால் உள்துறைச் செயலாளரை வரச் சொல்லி உத்தரவிட நேரிடும் என்று கடுமையாககூறினர்.
பின்னர் வழக்கை மாலைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications