இலங்கை: தமிழ் போராளிகள் குழு தலைவர் சுட்டுக் கொலை
மட்டக்களப்பு:
இலங்கை மட்டக்களப்பு நகரில் தமிழ் போராளிகள் குழுத் தலைவர் சிவகுரு நவரத்தினராஜா அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ தமிழ்நெட் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி:கந்தி என்று அழைக்கப்படும் சிவகுரு நவரத்தினராஜா (வயது 38) புதன்கிழமை மாலை தனது வீட்டின் குளியலறையில் இருந்தபோதுபக்கத்து வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத சிலர் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். கையெறி குண்டுகளையும் அவர்கள்வீசியுள்ளனர். இதில் சிவகுரு ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
இலங்கை ராணுவ வீரர்கள் அவரை மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிவகுருமரணமடைந்தார். இலங்கை ராணுவத்தின் பலத்த பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மட்டக்களப்பில் போராளித் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1967ம் ஆண்டு செப்டம்பர் 10ம் திேத பிறந்த சிவகுரு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தில் 1983ம் ஆண்டு இணைந்தார். அதன்பின்னர் அந்த அமைப்பு பிளவுபட்டபின் ரஸீக் என அழைக்கப்படும் முத்துலிங்கம் கணேசகுமார் தலைமையிலான பிரிவில் 1996ல்சேர்ந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் தீவிர தேடுதல் வேட்டையில், ரஸீக் பிரிவு போராளிகள் உதவியாக இருந்துவந்தனர். ரஸீக் கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன் பிறகு சிவகுரு தலைமையில்அப்பிரிவு இயங்கி வந்தது.
தொடர்ந்து இலங்கை ராணுவத்தின் 9வது பிரிவுக்கு சிவகுரு தலைமையிலான பிரிவு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்து வந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications