விஜயகாந்த் கட்சி பத்திரிக்கை வெளியீடு
மதுரை:
மதுரையில் இன்று காலை தொடங்கியுள்ள விஜயகாந்த் ரசிகர் மன்ற அரசியல் மாநாட்டில், கட்சிப் பத்திரிக்கையான அன்பு விஜயகாந்த்வெளியிடப்பட்டது.
மதுரை தோப்பூரில் விஜயகாந்த் ரசிகர் மன்ற முதலாவது அரசியல் மாநாடு இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டின்போது தனதுகட்சியின் பெயரை விஜயகாந்த் அறிவித்தார்.மாநாட்டின்போது புதிய கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை வெளியிடப்பட்டது. இந்தப் பத்திரிக்கைக்கு அன்பு விஜயகாந்த் எனபெயரிடப்பட்டுள்ளது. இப்பத்திரிக்கையை விஜயகாந்த் தனது கையால் வெளியிட்டார்.
மேலும், கட்சியின் கொடியாக மன்றக் கொடியே நீடிக்கும் என்று கூறிய அவர் கொடியையும் தூக்கிக் காண்பித்தார்.
காலை 10.30 மணியளவில் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சாப்பிடுவதற்காக எழுந்து சென்றனர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகாலியானது. இதைத் தொடர்ந்து ஒரு பத்திரிக்கையின் கேமரா மேன் காலியாக இருந்த இருக்கைகளைப் படம் எடுத்தார்.
இதைப் பார்த்ததும் கோபமடைந்த விஜயகாந்த் மைக்கைப் பிடித்து, காலியாக இருக்கும் இருக்கைகளை ஒருவர் படம் எடுக்கிறார்.விஜயகாந்த் மாநாடு பிசுபிசுத்தது என்று செய்தி போடுவதற்காகவே இவ்வாறு அவர் செய்கிறார். இதற்கு தொண்டர்கள் அனுமதிக்கக்கூடாது. யாரும் கலையாமல் இருந்து மாநாட்டைசிறப்பிக்க வேண்டும் என்று கோபத்துடன் கூறினார்.
விஜயகாந்த்தின் கோபத்தைப் பார்த்த கேமராமேன், ரசிகர்களை நினைத்துப் பயந்து அந்த இடத்தைக் காலி செய்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications