எஸ்.பி. இடமாற்றம்; மொட்டை போட்டு போலீஸார் கொண்டாட்டம்!
கோவை:
கோயம்பத்தூர் புறநகர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் இடமாற்றம்செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், ஏராளமான போலீஸார் மொட்டை அடித்தும், ஆடு வெட்டி சமைத்து சாப்பிட்டும்கொண்டாடியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொன். மாணிக்கவேல் மிகவும் கண்டிப்பான காவல்துறை அதிகாரி. மிகவும் சுறுசுறுப்பானவர். தனக்குக் கீழ் வேலை பார்க்கும்அதிகாரிகளும், காவலர்களும் தன்னைப் போலவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.செங்கை கிழக்கு எஸ்.பியாக இருந்தபோது கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த இரண்டு காவலர்களை அவர்களது வீட்டுக்குச்சென்று அடித்து இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பரபரப்பேற்படுத்தினார்.
சேலத்தில் எஸ்.பியாக இருந்தபோது, பணியில் அலட்சியமாக இருந்ததற்காக ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்தினத்தை கடுமையாககண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மணிரத்தினம் வீட்டை விட்டு வெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.பின்னர் இவரை கண்டுபிடித்து சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்குக் கூட்டி வந்து, டிஜிபி அலெக்சாண்டர்மணிரத்தினத்தை சமாதானப்படுத்தினார்.
பின்னர் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதற்காக மணிரத்தினம் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். இன்னும் அவர்பணியில் சேர்க்கப்படவில்லை. மணிரத்தினம் விவகாரம் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் கோவைக்கு மாற்றப்பட்டார்.
கோவைக்கு பொன்.மாணிக்கவேல் வந்தது அங்குள்ள பல போலீஸாருக்கு பெரும் கிலியைக் கொடுத்தது. அவருக்குக் கீழ்வேலை பார்க்கப் போவதை நினைத்து அவர்கள் பீதியடைந்தனர். அவர்கள் நினைத்தது போலவே, கோவை போலீஸாரை பெண்டுநிமிர்த்தினார் பொன்.மாணிக்கவேல். தீர்க்கப்படாத பல்வேறு சமூக விரோதிகள் பிரச்சினையை அவர் கையில் எடுத்து அவர்களதுகொட்டத்தை அடக்கினார்.
சமூக விரோதிகள், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த போலீஸாருக்கும் ஆப்பு கிடைத்தது.பொன்.மாணிக்கவேலின் அணல் வேக போக்குக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவருக்குக் கீழ் வேலை பார்த்து வந்த அதிகாரிகள்தடுமாறினர். போலீஸார்தான் இப்படித் தடுமாறினார்களே தவிர பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தார்பொன்.மாணிக்கவேல்.
பொதுமக்களின் குறைகளை வாரம் தோறும் எஸ்.பி. அலுவலகத்தில் அமர்ந்து கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொடுத்ததால், மக்களிடம் அவருக்கு செல்வாக்கு எகிறியது. இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் தற்போது கோவையிலிருந்துஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது இடமாற்றம் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், போலீஸாருக்கு பெருத்த நிம்மதியையும் கொடுத்துள்ளது.பொன்.மாணிக்கவேலால் பாதிக்கப்பட்ட போலீஸார் பலர் சமீபத்தில் தங்களது குல தெய்வங்களுக்கு மொட்டை போட்டும், ஆடுவெட்டி சமைத்துச் சாப்பிட்டும் கொண்டாடியுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது.
இந்த செய்தி காவல்துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமாதிரிநடந்திருந்தால் அது மிகவும் வேதனையானது என்று நேர்மையான சில அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications